;
Athirady Tamil News

நடனமாடும் வீடியோவை வெளியிட்ட இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்: காரணம் இதுதான்..!!

0

ரஷ்யாவில் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட இஸ்லாமிய இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் Yekaterinburg பகுதியில் பிறந்த மதினா பசீவா என்ற இளம்பெண் தலைநகர் மாஸ்கோவில் குடியிருந்து வருகிறார்.இந்த நிலையில் சமூக வலைதள பக்கத்தில் தனது நடனமாடும் வீடியோ ஒன்றை அவர் பதிவேற்றியுள்ளார்.

அதில் அவரது வயிறு பகுதி ஆடைக்கு வெளியே தெரிவதாக அவரது சமூகத்தைச் சேர்ந்த மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்

மத அடிப்படைவாதிகள் மிகுந்த Tadzhiki சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், தமது உயிருக்கு ஆபத்து வரலாம் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

புகழை தேடி அலையும்போது ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம், அல்லாவுக்கு பதில் சொல்ல வேண்டும், உனது திறந்த வயிற்றுப்பகுதி அதிக விலை தர நேரலாம் என ஒருவர் மிரட்டும் தொனியில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொள்கின்றரா என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மதினா, சமுதாய மக்களே, உங்களை ஒருபோதும் திருப்தி படுத்தவே முடியாது. குறை காண்பதில் மட்டுமே உங்கள் பார்வை இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 − two =

*