;
Athirady Tamil News

வயது முதிர்ந்த ஓட்டுநர்களுக்கான மருத்துவ பரிசோதனை விதிகளில் மாற்றம் செய்துள்ள சுவிட்சர்லாந்து..!!

0

வயது முதிர்ந்த ஓட்டுநர்களுக்கான மருத்துவ பரிசோதனை விதிகளில் மாற்றம் செய்துள்ள சுவிட்சர்லாந்து, இனி அவர்கள் எழுபது வயதுக்கு பதிலாக எழுபத்தைந்து வயதில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டால் போதும் என அறிவித்துள்ளது.

இந்த மாற்றம் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் நேற்று அறிவித்தது.

தற்போது 70 வயதை அடைந்த கார் ஓட்டுபவர்கள் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவர் ஒருவரால் பரிசோதிக்கப்பட வேண்டும்.

இந்த விதி தொழில் முறை கார் ஓட்டுநர்களுக்கும் பொருந்தும். கார் ஓட்டுவதற்கான உடல் தகுதியை பரிசோதிக்கும் மருத்துவ பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழலில், அதற்கான வயதை உயர்த்த வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வாக்களித்ததையடுத்து இந்த சட்ட மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைக்கான வயதை 70-இலிருந்து 75-ஆக மாற்றும் இந்த மசோதாவை நாடாளுமன்ற உறுப்பினரான Maximilian Reimann கொண்டுவந்தார், அவரே 75 வயதைத் தாண்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த மசோதாவை எதிர்த்தவர்கள், தற்போதுள்ள விதியான 70 வயதில் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய உதவியதாக தெரிவித்தனர்.

புதிய விதி, முதியவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கான 300 சுவிஸ் ஃப்ராங்குகளை மிச்சப்படுத்துவதோடு, இந்த பரிசோதனைக்காக அரசாங்கத்துக்கு ஏற்படும் செலவையும் குறைத்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + twenty =

*