;
Athirady Tamil News

சீனாவில் 4 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி கழிவறையில் வைத்து பூட்டிய கொடூர தந்தை..!!

0

சீனாவில் 4 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி கழிவறையில் வைத்து பூட்டிய கொடூர தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமியை அந்த தந்தை தமது உடைகளை துவைக்கும்படியும் வற்புறுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சீனாவின் Guizhou மாகாணத்தில் உள்ள Qingzhen பகுதியிலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தொழிற்சாலை ஒன்றில் ஓட்டுனராக பணிபுரியும் அவர் தினசரி சிறுமியை கழிவரையில் வைத்து பூட்டிவிட்டு வேலைக்கு செல்வதாக கூறப்படுகிறது

காலை 6 மணிக்கு குடியிருப்பில் இருந்து வெளியே செல்லும் அவர், பின்னர் இரவு 11 மணியளவில் மட்டுமே குடியிருப்பு திரும்புவதாக தெரியவந்துள்ளது.

அதன் பின்னரே குறித்த சிறுமிக்கு உணவு தருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.குறித்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவந்ததும் சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார் சிறுமியை மீட்டதுடன், அந்த தந்தையையும் கைது செய்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் சிறுமி, காப்பகத்தில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*