;
Athirady Tamil News

தெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் ஹைடெக் விபச்சாரம் – கணவன், மனைவி கைது..!!

0

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் கிஷன் மொடுகுமுடி(34). இவரது மனைவி சந்திரா(31). இந்த தம்பதியருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

’டோல்லிவுட்’ எனப்படும் தெலுங்கு திரையுலகில் காலடி பதித்த கிஷன் மொடுகுமுடி சில படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். பின்னர், குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்கும் ஆசையில் தெலுங்கு திரையுலகில் நன்கு அறிமுகமான இளம்வயது நடிகைகளை அமெரிக்காவுக்கு அழைத்துவந்து விபசார தொழிலில் ஈடுபடுத்த ஆரம்பித்தார்.

சிக்காகோ பகுதியில் உள்ள பெல்மொன்ட் கிராகின் என்னும் இடத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்த கிஷன், ஆந்திராவில் இருந்து 5 நடிகைகளை கலாச்சார நிகழ்ச்சி என்ற போர்வையில் அமெரிக்காவுக்கு அழைத்து வந்தார்.

இந்தியர்கள் அதிகம் கூடும் பிரபல தெலுங்கு மொழி கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்களுக்கு அடிக்கடி சென்று தன்னிடம் அழகிய பெண்கள் உள்ளதாக கூறி விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை பிடிக்க ஆரம்பித்தார். இதற்கு இவரது மனைவி சந்திராவும் உடைந்தயாக இருந்துள்ளார்.

ஒருமுறை நடிகையுடன் உல்லாசமாக இருப்பதற்கு 3 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 2 லட்சம் ரூபாய்) வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் அழைத்து வந்த பெண்களை அமெரிக்காவின் நியூயார்க், டல்லாஸ், நியூ ஜெர்சி, வாஷிங்டன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பெருநகரங்களுக்கு அனுப்பி பணம் சம்பாதித்துள்ளனர்.

பாலியல் தொழிலுக்காக இந்தியாவில் தாங்கள் அழைத்துவந்த நடிகைகள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பளம், அவர்களை அனுப்பிவைத்த வாடிக்கையாளர்கள் பெயர் என அனைத்து குறிப்புகளையும் ஒரு பதிவேட்டில் எழுதி வைத்துள்ளனர். இவர்களில் வலையில் சிக்கியவர்களில் இரு இளம்பெண்கள் பெங்களூரு மற்றும் சென்னையை சேர்ந்த பிரபல நடிகைகள் என தெரியவந்துள்ளது. சில தெலுங்கு கலாச்சார நிகழ்ச்சிகளில் இவர்கள் இருவரும் அடிக்கடி காணப்படும் வீடியோ காட்சிகள் அதிகாமாக காணப்படுகிறது.

மேலும், ஒரு நடிகையை இந்தியாவில் இருந்து அழைத்துவந்து, அவரை கொடுமைப்படுத்தியதுடன் கொன்று விடுவதாகவும் இந்த தம்பதியர் மிரட்டியதாக சிக்காகோ கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்த 42 பக்க குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில புகார்களின் அடிப்படையில் வாஷிங்டன் நகரின் அருகே இந்த தம்பதியரை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்த சிக்காகோ போலீசார், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற விசாரணையின்போது சிறை சீருடையில் நீதிபதி முன்னர் ஆஜரான கிஷன் மொடுகுமுடியும், சந்திராவும் தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

பள்ளிப் பருவத்தில் இருக்கும் இவர்களின் இரு குழந்தைகளும் விர்ஜினியா நகரில் உள்ள குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − five =

*