;
Athirady Tamil News

இத்தாலி பிரதமருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு – இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை..!!

0

ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 7 நாள் பயணமாக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

இந்த பயணத்தின் முதல்கட்டமாக இன்று இத்தாலி சென்றடைந்த சுஷ்மா அந்நாட்டின் பிரதமர் கியூசெப்பி கான்ட்டேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் இரு நாட்டு உறவுகள் குறித்தும், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, இத்தாலியில் புதியதாக பிரதமர் பொறுப்பேற்ற கியூசெப்பி கான்ட்டேவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், இந்தியா இத்தாலி இணைந்து இருப்பதன் முக்கியத்துவம் குறித்தும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி என்ஸோ மோவேரோ மிலான்சேயை சந்தித்து பிராந்தியம் மற்றும் உலக அரசியல் பிரச்சனைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 6 =

*