;
Athirady Tamil News

ராகுல் காந்தியை பிரதமராக பார்க்க ஆசைப்படும் அத்வானியின் முன்னாள் உதவியாளர்..!!

0

இந்தியாவின் முன்னாள் துணை பிரதமர் அத்வானியின் உதவியாளராக இருந்தவர் சுதேந்திர குல்கர்னி. அவர் தற்போது பிரதமர் மோடியின் ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளார்.

இந்நிலையில், வருங்காலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக பார்க்க ஆசைப்படுவதாக சுதேந்திர குல்கர்னி கூறியுள்ளார். பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட சில முக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய பிரதமர் மோடி தவறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், ராகுல் காந்தி நல்ல மனதுடைய தலைவர் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தானுடனான பிரச்சினையை தீர்ப்பதற்கான தேவை என்ன என்பதை நாம் குறிப்பிட வேண்டும். எனவே தான் எதிர்காலத்தில் ராகுல் காந்தியை பிரதமராக பார்க்க நான் விரும்புகிறேன் என்று கூறுகிறேன்.

ராகுல் காந்தி இளைஞராக இருக்கிறார், அவர் ஒரு லட்சியவாதி. அவர் இரக்கமுள்ள ஒரு மனிதர். சமீப காலங்களில் எந்த அரசியல் தலைவரும் அன்பு, பாசம் மற்றும் இரக்கம் பற்றி பேசியதில்லை. ராஜீவ் காந்தி எங்கள் எதிர்கட்சியில் இருந்தபோது ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். அதேபோல ராகுல் அவர்கள், பாகிஸ்தான், சீனா, வங்களாதேசம் ஆகிய நாடுகளுக்கு சென்று, பிரதமர் மோடி தீர்க்க தவறி பெரிய பிரச்சனைகளை எப்படி தீர்க்க வேண்டும் என்ற புதிய யோசனைகளை கற்று ஒரு சிறந்த தலைவராக வேண்டும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + eleven =

*