;
Athirady Tamil News

ஹொரோயின் கடத்தலில் ஈடுபட்ட தம்பதி கைது..!!

0

வெலிமட பகுதியில் வைத்து ஹொரோயின் கடத்தலில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்திற்கு இடமான லொறி ஒன்றை சோதனையிட்ட போது ஹொரோயினுடன் குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்களிடம் இருந்து 21 ஹொரோயின் பெக்கட்கள் கைப்பற்றப்பட்டதுடன் லொறியை சோதனையிட்ட போது அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 37 ஹொரோயின் பெக்கட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டி, தென்னங்கும்புர பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களை வெலிமட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 19 =

*