;
Athirady Tamil News

விவசாய பிரதி அமைச்சரின் வடமராட்சி கோட்டையிலும் உயரிய கெளரவம்..!! (படங்கள்)

0

விவசாய துறை பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள சுதந்திரக்கட்சி அலுவலகத்திற்கு ஆதரவாளர்களின் பேராதரவுடன் வரவேற்க்கப்பட்டார்.இந்த நிகழ்வில் மாநகரசபை சபை உறுப்பினர்கள்,நகரசபை உறுப்பினர்கள்,பிரதேசசபை உறுபினர்கள் அமைச்சர் அவர்களுக்கு உயரிய கௌரவத்தை வழங்கியிருந்தனர்.

விவசாய பிரதி அமைச்சரின் கோட்டையாக விளங்கும் வணங்காமண் வடமராட்சியிலும் விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கு உயரிய கெளரவம் அளிக்கப்பட்டது.

கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் கருத்து தெரிவிக்கையில் கிராமங்கள் தோறும் பிரதிநிதிகளை உருவாக்கிய பின்பு பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக விவசாய பிரதி அமைச்சை பொறுப்பேற்றதன் மூலமாக சேவைகளை முன்னெடுக்க முடியும் எனவும்,கௌரவ அங்கஜன் இராமநாதனின் பணிப்பின் பேரில் உருவாக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திக்காண குழுக்களின் மூலமும் நிறைவேற்ற முடியும் எனவும் தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*