;
Athirady Tamil News

சோக்கல்லோ சண்முகநாதனின் நூல் வெளியீடு – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்..!!

0

கனடாவில் வசித்து வரும் முதுபெரும் எழுத்தாளரும், கலைஞருமான ஏழாலையூர் சோக்கல்லோ சண்முகநாதன் 1959 இல் எழுதி வெளியிட்ட “கோமதியின் கணவன்” எனும் நூலானது மீள்பதிப்பு செய்யப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

ஏழாலை முத்தமிழ் மன்றத்தில் இன்று 19.06.2018 மாலை 03 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டார்.

நூலை தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான அறங்காவலர் கலாநிதி ஆறு.திருமுருகன் வெளியிட்டு வைக்க வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் முதற்பிரதியைப்பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர், கலாநிதி ஆறு.திருமுருகன், மற்றும் கலைஞரின் நண்பர்கள், ஊரவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 8 =

*