;
Athirady Tamil News

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை – இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!! (வீடியோ)

0

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட ஹயுனா டிரால் என்ற பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, அந்த பகுதியை இன்று மாலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காயமடைந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர் ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − one =

*