;
Athirady Tamil News

9 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்ட கெஜ்ரிவாலின் போராட்டம் முடிவு..!! (வீடியோ)

0

டெல்லியில் அரசியல் குழப்பதை முடிவுக்கு கொண்டு வர ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு, துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் கேட்டுக் கொண்டதை அடுத்து, 9 நாட்களாக நடத்திய போராட்டத்தை கெஜ்ரிவால் முடித்தக் கொண்டார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய கெஜ்ரிவால், இப்பிரச்சினையை தீர்க்க கோரி ஆளுநர் இல்லத்தில் தர்ணா போராட்டம் நடத்தி வந்தார். 9 நாட்களாக போராட்டம் நீடித்த நிலையில் முதன்முறையாக இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு துணை நிலை ஆளுநர் கடிதம் எழுதினார். அதில், டெல்லி தலைமை செயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தினரை உடனடியாக சந்தித்துப் பேசுமாறு வலியுறுத்தி இருக்கிறார். இரு தரப்பினரும் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்கு இந்த சந்திப்பு உதவும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்தை கைவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − two =

*