;
Athirady Tamil News

காற்று மாசு குறித்து ஆய்வு- சென்னை விஞ்ஞானிக்கு தைவான் விருது..!!

0

பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வில் சிறந்த பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானிகளுக்கு தைவானின் டாங் விருது அறிவிக்கப்பட்டது.

அதில் சென்னையை சேர்ந்த தமிழரான வீரபத்ரன் ராமநாதன் என்ற விஞ்ஞானியும் ஒருவர். இவர் காற்றுமாசு குறித்து நடத்திய ஆய்வுக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

அதற்காக அவருக்கு ஒரு மில்லியன் டாலர் அதாவது ரூ.6½ கோடியே பரிசு தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் வீரபத்ரன் ராமநாதன் சென்னையில் பிறந்தவர். பசுமைக்குடில்கள் மற்றும் காற்று மாசு தொடர்பான அடிப்படை புரிந்துணர்வில் வியத்தகு பங்களிப்பை வழங்கியுள்ளது.

குளோரைப்ளோரா கரியமில வாயுக்களின் விளைவுகள் குறித்து முதன் முறையாக சுட்டிக்காட்டினார். குளோரைப்ளோரா கரியமில வாயுவை குளிர் சாதனம் மற்றும் தயாரிப்பு துறைகளில் பயன்படுத்த கடந்த 1975-ம் ஆண்டிலேயே ஆலோசனை வழங்கியிருந்தார்.

இவரது ஆராய்ச்சியில் புவி மண்டல ‘பிரவுன் குளவ்ட்’ எனப்படும் கருப்புநிற கரியமில வாயுவின் விளைவுகளையும் குணங்களையும் அறிவியல் உலகம் அறிய உதவியது.

பருவநிலை வெப்பமயமாதல் விளைவுகளில் இருந்து மக்களையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் காக்கும் நோக்குடன் தற்போது சூர்யாதிட்டம் என்ற புதிய ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இவர் தவிர 2 அமெரிக்க விஞ்ஞானிகள் தைவானின் டாங் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர். அவர்களில் விஞ்ஞானி ஜேம்ஸ் ஹென்சனும் ஒருவர். இவர் உலகளாவிய வெப்பமயமாதல் குறித்த எச்சரிக்கையை விடுத்து அர்த்தமுள்ள நடவடிக்கையை வலியுறுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + sixteen =

*