;
Athirady Tamil News

வவுனியா பிரதேச செயலகத்தில் 20 வருடத்திற்கு மேலாக கடமையாற்றும் 16 உத்தியோகத்தர்கள்..!!

0

வவுனியா பிரதேச செயலகத்தில் எந்தவித இடமாற்றங்களும் வழங்கப்படாது கடந்த 20 வருடங்களுக்கு மேலாக 16 உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவது தகவல் அறியும் சட்டம் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பதவிக் காலம் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட நிலையில் தகவல் அதிகாரியால் வழங்கப்பட்ட தகவலின் மூலமே இவை தெரியவந்துள்ளது.

அந்த வகையில் வாழ்வின் எழுச்சி அபிவிருந்தி உத்தியோகத்தர்களான க.திருமலர்செல்வி (21 வருடம்), ச.சகீனா (20 வருடம்), தி.கீர்த்திசிங்கம் (20 வருடம்), சி.ஆனந்தகுமார் (21 வருடம்), நா.வசந்தகுமாரி (20 வருடம்), தி.கைலேஸ்வரன் (21 வருடம்), எம்.ஆர்.எம்.நவாஸ் (22 வருடம்), ஜே.ஏ.சி.மல்காந்தி (21 வருடம்), அ.ஜசிந்தா (21 வருடம்), மு.இரட்னேஸ்வரி (20 வருடம்), த.குகனேஸ்வரி (21 வருடம்), கு.தனபாலன் (20 வருடம்), வாழ்வின் எழுச்சி முகாமையாளரான பா.ஜானகி (20 வருடம்), அலுவலகப் பணியாளரான ந.யோகராசா (24 வருடம்), கிராம அலுவலர்களான க.கணேசலிங்கம் (23 வருடம்), பா.ஜெயபாலன் (23 வருடம்) ஆகிய 16 உத்தியோகத்தர்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக எந்தவித இடமாற்றமும் வழங்கப்படாத நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 1 =

*