;
Athirady Tamil News

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேர் கைது..!!

0

பொகவந்தலாவ பொகவானை தோட்ட வீதியின் அருகாமையில் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 05 பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (20) புதன்கிழமை அதிகாலை 03 மணயளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களும், 54 பொதிகளில் மாணிக்ககல் இல்லவகைகளும் பொகவந்தலாவ பொலிஸாரால் மீட்கபட்டுள்ளன.

இதேவேளை இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வினால் பொகவானை தோட்ட தேயிலை மரங்கள் நாசமாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 05 சந்தேகநபர்களும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*