;
Athirady Tamil News

சிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி..!! (படங்கள்)

0

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அனனை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு இன்றும் (20) இடம்பெற்றது. இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள இக் காண்காட்சியில் மாணவர்களின் பல்வேறு ஆக்கங்கள் உட்பட பல பொருட்கள் காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

பாரம்பரியம்,விவசாயம், கழிவுப்பொருட்களை கொண்டு ஆக்கப்பட்டுள்ள பொருட்கள், தொங்கு பாலம், இருட்டறை, உள்ளிட்ட பல பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாதிரி மாவீரர் துயிலுமில்லம் அனைவரையும் கவனத்தை ஈர்த்தமையும் குறிப்பிடத்தக்கது

இக் கண்காட்சி இன்றும்(20) நாளையும்(21) இடம்பெறவுள்ளது.

மிகவும் சிறப்பாக இடம்பெற்ற இக் கண்காட்சியில் அமல மரிதியாகிகள் வட மாகாண குரு முதல்வர் அருட் தந்தை எட்வின் வசந்தராசா, கிளிநொச்சி கல்வி வலய ஆரம்ப பிள்ளை பருவ உதவிக் கல்விப் பணிப்பாளல் விந்தன், கிளிநொச்சி சின்மயா மிசன் குரு முதல்வர் மற்றும் ஏனைய முன்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 19 =

*