;
Athirady Tamil News

பிரான்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் வவுனியா பிரதேச செயலாளருடன் சந்திப்பு..!! (படங்கள்)

0

பிரான்ஸ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட கற்கை நெறியில் கல்வி பயிலும் மாணவர்கள் தமது கல்வித்திட்டத்தின் ஒர் அங்கமாக இலங்கைக்கு வருகை தந்து வடமாகாணத்தில் பல்வேறு சிறுவர் இல்லங்கள் போன்றவற்றிற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். அதில் ஒரு கட்டமாக இன்று உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடு மற்றும் நிர்வாக முறைமைகள; போன்றவற்றை அறிவதற்காக வவுனியா பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதன் போது வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசாவினால் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் மற்றும் பிரதேச செயலக செயற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா.
உதயராசா, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், உதவி பிரதேச செயலாளர், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெ. ஜெயக்கெனடி மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்..

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

????????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − eight =

*