;
Athirady Tamil News

வவுனியா பேருந்து நிலையத்தில் லீசிங் நிறுவனத்தின் வாகன விற்பனை சந்தை..!! (படங்கள்)

0

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று முதல் வாகனங்கள் லீசிங் நடவடிக்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது இது குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பழைய பேருந்து நிலையமானது கடந்த ஜனவரி முhதம் முதல் வடமாகாண முதலமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக மூடப்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துச் சேவைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் பொதுமக்களின் நடமாட்டமின்றி வெறிச்சோடிக்காணப்படுகின்றது. இந்நிலையில் இன்று பேருந்து நிலையத்திற்குள் லீசிங் நிறுவனங்கள் தமது வாகன விற்பனைச் செயற்பாட்டினை விரிவு படுத்தி வியாபார நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 40வருடமாக பேருந்து நிலையமாக செயற்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம் தற்போது வவுனியா நகரசபையின் அனுமதியுடன் இவ்வாறு பல தேவைகளுக்குப்பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*