;
Athirady Tamil News

வவுனியாவில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி..!!

0

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் உறவினர்களால் இன்று (20) மதியம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் 3 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன் காலை வேலைக்கு சென்ற நிலையில் மனைவி தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சு மருந்தினை குளிர்பானத்தில் கலந்து வழங்கியதுடன், தானும் அதனை அருந்தியுள்ளார்.

இதன் போது இரண்டாவது மகனான 6 வயது சிறுவன் தனது அம்மம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மா குளிர்பானத்தில் ஏதோ கலந்து தந்து விட்டார் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு சென்ற உறவினர்கள் அவர்கள் நால்வரையும் மீட்டேடுத்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அன்புலன்ஸ் வண்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, 40 வயதான தாய் மற்றும்
12 வயது, 6 வயது, 1 1/2 வயது பிள்ளைகள் மூவரும் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் 1 1/2 வயது குழந்தை ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*