;
Athirady Tamil News

வுனியா சமுர்த்திப் பணிப்பாளரின் உறவினர் உட்பட 6 பேர் மீது நடவடிக்கை..!!

0

வவுனியா மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளரின் உறவினர் ஒருவர் மீது சமுர்த்தி வங்கியில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்திலுள்ள மேலும் 5 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்து அவர்கள் மீதும் தனியான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவ்விசாரணைகள் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளதாகவும் பண மேசாடியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.

கொழும்பிலுள்ள சமுர்த்தி தலைமை அலுவலகத்திலிருந்து சென்ற குழுவினர் குறித்த 6 பேரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. அத்துடன் வவுனியா மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளரின் உறவினர் ஒருவர் சமுர்த்தி வங்கியில் பெருமளவு பண மோசடியில் ஈடுபட்டிருந்தார். வவுனியா மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளர் அவரைக்காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

இது தொடர்பாக சரியாக தரவுகளை மேற்கொண்ட கொழும்பு தலைமை அலுவலகம் குறித்த 6 பேருக்கான விசாரணைகளை துரிதப்படுத்தியதுடன் ஆதாரங்களையும் திரட்டியுள்ளது. தற்போது விசாரணைகள் இறுதிக்கட்டதை அடைந்துள்ளதுடன் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கும் பட்சத்தில் குறித்த ஆறுபேரும் சமுர்த்தி உத்தியோகத்தர் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவார்கள் என்றும் தெரியவருகின்றது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − three =

*