வவுனியாவில் அமானா தகாபுள் பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு..!!! (படங்கள்)
வவுனியா 2ஆம் குறுக்குத் தெருவில் இன்று 20.06.2018 காலை 10.30மணியளவில் அமானா தகாபுள் நிறுவனத்தின் 35ஆவது கிளையினை திறந்துவைக்கப்பட்டது.
இலங்கையில் தனது செயற்பாட்டினை கடந்த 20 வருடங்களாக மேற்கொண்டு வரும் அமானா தகாபுள் நிறுவனம் இன்றைய தினத்தில் வடமாகாணத்தின் நுழைவாயிலான வவுனியாவில் தனது பிராந்திய அலுவலகத்தினை திறந்து வைத்துள்ளது சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெகான் ராஜபச்சா கலந்து கொண்டு பிராந்திய அலுவலகத்தினை உத்தியோகபூர்வமாகத்திறந்து வைத்துள்ளதுடன் நிகழ்வில் உதவி பொது முகாமையாளர் நிமால் பிரியந்த. பொது முகாமையாளர் ஆசீம், வடமத்திய மற்றும் வடமாகாண பிராந்திய முகாமையாளர் ஆரோக்கியநாதர் மோசஸ் மற்றும் நிறுவனத்தின் முகாமையாளர்கள், பணியாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா