;
Athirady Tamil News

வவுனியா நெளுக்குளத்தில் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட வைத்தியர் நல்லவர் என கையேழுத்து வேட்டை..!!

0

வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் இளம் பெண்ணோருவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட வைத்தியர் நல்லவர் என பொதுமக்களிடம் கையேழுத்து பெறும் சம்பவம் இன்று (20.06.2018) இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்ணோருவர் நெளுக்குளம் இராசேந்திரகுளம் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு தினசரி நோயாளிகள் மருத்துவ அறிக்கைகளை கொண்டு சென்று வழங்குவது வழமை அதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை மருத்துவ அறிக்கைகளை எடுத்து சென்ற குறித்த பெண்ணை அவ் மருத்துவமனையின் வைத்தியர் கட்டிப்பிடித்து பாலியல் ரீதியான தொந்தரவு செய்துள்ளார்.

அதையடுத்து குறித்த பெண் சம்பவத்தினை பெற்றோருக்கு தெரியப்படுத்தியமையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடோன்றினை மேற்கொள்ளப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் வைத்தியரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

இந் நிலையில் இன்றைய தினம் (21.06.2018) அவரது உறவினர்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தின் இலட்சனை பொறிக்கப்பட்ட கடித்தில் குறித்த வைத்தியர் கிராமத்திற்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார். அவர் நல்லதொரு மனிதர் அவரின் வளர்ச்சியின் மீது பொறாமை கொண்டவர்களினால் இவ்வாறான பொய்யான வதந்திகள் பரப்புகின்றனர். இக் கடித்தினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டுமேன எழுதி பொதுமக்களிடம் கையேழுத்து பெற்றுள்ளனர்.

அயலவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் கையேழுத்திட்டோம் எனவும் நாங்கள் மனசார கையேழுத்திடவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வைத்தியர் அரச வைத்தியசாலை எதிலும் பணியாற்றுகின்ற வைத்தியர் அல்ல , ஆங்கில வைத்தியம் செய்வதற்கு தகுதி அற்றவர் , அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அங்கத்தவர் இல்லை என வவுனியா அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 9 =

*