;
Athirady Tamil News

வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவராக ஆளுமைமிக்க ஒருவரைத் தெரிவு செய்யவும் வர்த்தகப்பிரமுகர்கள் தெரிவிப்பு..!!

0

வவுனியா வர்த்தகர் சங்கத்தில் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய தலைவர் தெரிவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 24ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அங்கத்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று நேற்று கூடிய நர்வாக சபை உறுப்பினர்கள் சங்கத்தில் அங்கத்துவமில்லாத ஒருவரின் திருமண நிகழ்விற்காக 24ஆம் திகதி இடம்பெறவிருந்த வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய தலைவர் தெரிவினையும் பிற்போடப்பட்டுளளர்.

இந்நிலையில் கடந்த காலங்களில் சங்கத்தின் தலைவராக இருந்தவர்கள்போல வினைத்திறனற்ற செயற்பாடுகளை மேற்கொண்ட தலைமைகளை உருவாக்கவேண்டாம் ஆளுமை மிக்க தலைமையையும இளம் தலைமுறையினரையும் புதிய நிர்வாகத்திற்குள் உருவாக்கி வர்த்தகர் சங்கத்தின் நம்பகரமான செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு அத்திவாரம் இடுமாறு வர்த்தகப்பிரமுகர்கள் சிலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இடம்பெறவுள்ள வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் புதிய வர்த்தகர் சங்கத்தின் தலைவர் தெரிவு தொடர்பாக கருத்துத் தொவித்துள்ள வர்த்தகப்பிரமுகர்கள் சிலர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் தெரிவிக்கும்போது,

வவுனியாவில் கடந்த 20வருடங்களுக்கு மேலாக வர்த்தகர் சங்கம் செயற்பட்டு வருகின்றது குறித்த சங்கம் வர்த்தகர்கள் நலனில் அக்றை இல்லை. வர்த்தகர் சங்கத்தைக்கட்டியெழுப்பும் நடவடிக்கையில் முழுமையாகச் செயற்பட்டிருக்கவில்லை. ஒரு சில வர்த்தகப்பிரமுகர்கள் தமது சுயலாபத்திற்காகவே வர்த்தகர் சங்கத்தினைப்பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவான செய்றபாடுகளை வர்த்தகர் சங்கத்தினர் பாதுகாப்புத்தரப்பினருக்கே முன்னுரிமை வழங்கி மேற்கொள்ளப்பட்டு வருவதைக்காணக்கூடியதாக உள்ளது. இது அவர்களுக்கு பாதுகாப்புத் தரப்பினரின் மறைமுகமான ஆதரவினை கோரியுள்ளதைக்காட்டுகின்றது.

எனவே புதிய நிர்வாகத்தில் இவ்வாறானவர்களை அனுமதிக்காது ஆளுமை, முற்போக்குச்சிந்தனை, செயல்திறன் கொண்ட இளைய தலைமுறையினருக்கு தலைவர் பதவியை வழங்கி வவுனியா நகரில் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு வர்த்தகர் சங்கம் பூரண சுதந்திரத்துடன் இயங்கும் சங்கமாக தம்மை வளர்த்துக்கொள்ள முன்வருமாறும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களின் நலனில் கரிசனையுடனும் பழைய பேருந்து நிலைய நெருக்கடிக்கு நிரந்தரத்தீர்வு பெற்றுத்தர வலியுறுத்துமாறும் அதனைச்சூழவுள்ள பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களுக்கு பாதகம் ஏற்படாவகையில் புதிய சங்கத் தலைவர் சங்கத்தின் செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் இவற்றைக்கருத்திற்கொண்டே புதிய தலைவருக்கான ஆதரவினை வர்த்தகர்கள் வழங்க முன்வரவேண்டும் எனவும் வர்த்தகப்பிரமுகர்கள் சிலர் தமது கருத்துக்களில் வலியுறுத்தியுள்ளார்கள்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 8 =

*