;
Athirady Tamil News

வவுனியா நகரசபைத்தவிசாளர் வர்த்தகருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை..!!

0

வவுனியா நகரசபைத்தலைவராக தெரிவு செய்யப்பட்ட திரு. இ. கௌதமனை வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் வர்த்தக நிலையங்கள் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் தொடர்பாகவும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் வர்த்தகப்பிரமுகர்கள் குழுவினர் கடந்த மாதம் 16ஆம் திகதி நகரசபையில் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன்போது நகரசபைத்தவிசாளர் ஒரு மாத காலம் கால அவகாசம் வழங்குமாறும் கோரியதுடன் அதற்கிடையில் பழைய பேருந்து நிலையப்பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தருவதாக வர்த்தகப்பிரமுகர்களுக்கு வாக்குறுதியளித்துள்ளார். ஆனால் இன்று வரையில் நகரசபைத்தவிசாளரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை அவர் அதற்கான நடவடிக்கையும் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றத்தவறியுள்ளதாக பேருந்து நிலைய வர்த்தக உரிமையாளர்கள் நகரசபைத்தவிசாளர் மீது குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக பேருந்து நிலைய வர்த்தக உரிமையாளர்கள் தெரிவிக்கும்போது,

மக்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தமது பதவிகளைப்பாதுகாத்துக் கொள்வதற்காகவே வாக்குறுதிகளையும் உறுதி மொழிகளையும் அள்ளி வழங்கிவிட்டுச் செல்கின்றனர். காலம் கடந்ததும் அவர்களினால் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்து காற்றில் பறந்துவிடுகின்றது. பின்னர் வேறு ஒரு புதிய வழிகளைத்தேடிச் சென்று காலத்தை இழுத்தடிப்பு செய்துவதுடன் தமது இருப்பையும் தக்கவைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நாங்கள் கடந்த பல வருடங்களாக எமது பகுதி மக்கள் பிரதிநிதிகளிடம் இதனைக்காணக்கூடியதாக உள்ளது.
இதேபோன்று இனிவரும் காலங்களில் மக்களுக்கு மேல் ஏறி அரசியல் செய்யும் அனைவருக்கு மக்கள் தகுந்த படத்தினை புகட்டுவார்கள்.

கடந்த ஜனவரி மாதம் முதல் பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதையடுத்து எமது வர்த்தக நிலையங்களில் வியாபாரம் இன்றி வெறிச்சோடிக்காணப்படுவதுடன் எமக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தினை ஈடு செய்து கொள்ள முடியவில்லை. பெற்ற கடன்களை வங்கிகளுக்குச் செலுத்த முடியவில்லை. உணவகங்களுக்கு சிற்றுண்டி வழங்கும் பெண்தலைமைக்குடும்பங்கள் சுயதொழிலினை மேற்கொள்ள முடியவில்லை. இவ்வாறு பேருந்து நிலையத்தினை நம்பிய பல தொழிலாளர்கள் செய்வதறியாது நிலை தடுமாறிய நிலையில் இக்கட்டான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கு ஒரு தீர்வினைப் பெற்றுத்தர முடியாத மக்கள் பிரதிநிதிகளினால் எவ்வாறு புரையோடியுள்ள எமது இனப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்? ஆளுமை அற்றவர்களைத் தெரிவுகள் மேற்கொள்வதாலேயே எமது பகுதி பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. திட்டமிட்டபொருளாதாரக் கொள்கை, சிறந்த அபிவிருத்தி முறையான திட்டமிடல் இல்லை இவை அனைத்துமே எமது பின்னடைவிக்குக்காரணமாக அமைந்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − sixteen =

*