;
Athirady Tamil News

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்..!!

0

மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று (21) காலை 11 மணி முதல் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய வேலையற்ற பட்டதாரிகள், மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை அமைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதங்களில் இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு சென்ற பட்டதாரிகளுக்கு இதுவரை உரிய நியமனங்கள் வழங்கப்படாத நிலையில், அரசாங்கம் தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதாகவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கான வர்த்தமானி அறிவிப்பு எதற்காக எனவும் பட்டதாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்ச்சியாக தாங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்ற போதும் தங்களை அரசாங்கம் கண்டு கொள்வதில்லை எனவும், இச் செயற்பாடானது பட்டதாரிகளாகிய தங்கள் மத்தியில் பாரிய மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்றுடன் நிறைவடையாது என்றும் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், அது நிறுத்தப்படுவது அரசாங்கத்தின் கைகளில் தான் உள்ளது என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − one =

*