;
Athirady Tamil News

ராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுவிக்க கூடாது- தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்..!!

0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

7 தமிழரையும் விடுதலை செய்ய தமிழக அரசு 2016-ல் முடிவு செய்தது. இது தொடர்பாக அப்போது மத்திய அரசுக்கு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இக்கடிதத்துக்கு பதில் அனுப்பாமல் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 3 மாதங்களுக்கு இது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியதாம். அதில், 7 தமிழரை விடுதலை செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறதாம் மத்திய உள்துறை அமைச்சகம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 4 =

*