;
Athirady Tamil News

டாய்லெட் பேப்பரில் திருமண ஆடைகள் வடிவமைக்கும் போட்டி – வெற்றியாளருக்கு 10 ஆயிரம் டாலர்கள் பரிசு..!!

0

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சீப் சிக் என்ற அமைப்பு ஆண்டு தோறும் டாய்லெட் பேப்பர்களை கொண்டு மணமகள் ஆடையை வடிவமைக்கும் போட்டியை நடத்தி வருகிறது. சுவாரஸ்மான இந்தப்போட்டிக்கு 1,500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் 10 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.

இதில் பங்கேற்ற ஆடை வடிமைப்பாளர்கள், டாய்லெட் பேப்பர், ஒட்டும் பசை, குண்டூசி ஆகியவற்றை வைத்து மணமகளுக்கான ஆடைகளை நேர்த்தியாக வடிவமைத்தனர். மேனியோடு ஒட்டிக்கொண்டிருந்த இந்த ஆடைகளை அணிந்தபடி மாடல் அழகிகள் நடந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்தப்போட்டியில், விர்ஜிரியாவைச் சேர்ந்த க்ரூஸ் முதல் பரிசை தட்டிச்சென்றார். அவருக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இது 14 வது டாய்லெட் பேப்பர் ஆடை வடிவமைப்பு போட்டியாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + thirteen =

*