;
Athirady Tamil News

2 நிமிடம் முன்னதாக மதிய உணவு சாப்பிட்ட ஊழியரின் சம்பளம் கட் – ஜப்பானில் ஆச்சரியம்..!!

0

ஜப்பான் நாட்டின் கோப் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அடிக்கடி தனது இருக்கையிலிருந்து எழுந்து செல்வதாக கூறப்பட்டது. மதியம் 1 மணிக்கு செல்ல வேண்டிய உணவு இடைவேளைக்கு 3 நிமிடம் முன்பாக அவர் சென்றுள்ளார். இதனால் அவர் விதியை மீறி செயல்பட்டதாக கூறி அவரின் பாதி நாள் சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது.

வேலை நேரத்தில் பணியில் கவனம் செலுத்தாமல் அங்கும் இங்கும் அலைந்த காரணத்திற்காக அவருக்கு தண்டனை கொடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் அந்நிறுவனத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டனர். ஒரு நபர் தனது பணியின் போது எழ கூடாது என்பது தவறு. அதற்காக அவர்களின் சம்பளத்தை பிடிக்ககூடாது என கூறினர்.

இதையடுத்து தண்டனை அளித்த அதிகாரி மன்னிப்பு கேட்டுள்ளார். தவறுக்கு வருந்துகிறேன். இனி இவ்வாறு நடந்து கொள்ளாமல் பார்த்துக்கொள்கிறேன் என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 9 =

*