;
Athirady Tamil News

கேரளாவுக்கு பஸ்சில் 23 கிலோ வெள்ளி நகைகள் கடத்தல் – சேலம் வாலிபர் கைது..!!

0

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட மதுவிலக்கு துறை அதிகாரி மனோஷ் மற்றும் உதவி அதிகாரிகள் வாளையார் சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோவை உக்கடத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு தமிழ்நாடு அரசு பஸ் வந்தது. சோதனை சாவடியில் பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய ஏறினர். அப்போது பஸ்சில் இருந்து ஒரு வாலிபர் தனது பேக்கை மறைக்க முயன்றார். இதனை அதிகாரிகள் கவனித்தனர். உஷாரான அதிகாரிகள் அவர் மறைத்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி ரூ.23 கிலோ வெள்ளி நகைகள் அதில் இருந்தன.

இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் சேலத்தை சேர்ந்த மகேஷ் தனாஜி (வயது 34) என்பதும், டெல்லியில் இருந்து கோவைக்கு விமானத்தில் வெள்ளிநகைளை கடத்தி வந்து கோவை உக்கடத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு கடத்த முயன்றதாகவும் கூறினார்.

இதனையடுத்து அவரை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் என்று வருமான வரித்துறையினர் கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − five =

*