;
Athirady Tamil News

யாழ்.மாநகரசபையால் வீதி புனரமைப்பு – பிரதிமேயர், உறுப்பினர் பார்வையிட்டனர்..!! (படங்கள்)

0

யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு பிரிவில் உள்ளடங்கியுள்ள ஜே/100 (வண்ணார்பண்ணை வட – கிழக்கு) காமாட்சி முன்பள்ளி (நாச்சிமார் கோவிலடி) க்கு எதிரில் அமைந்துள்ள சிறு ஒழுங்கையானது மக்கள் போக்குவரத்துச்செய்ய முடியாதவாறு மோசமாகச்சிதைவடைந்து காணப்பட்டது.

கடந்த உள்ளூராட்சித்தேர்தலில் மேற்படி 02ஆம் வட்டாரத்தில் வெற்றிபெற்ற மாநகரசபை உறுப்பினரான ப.தர்சானந்தின் முயற்சியால் மேற்படி வீதியானது யாழ்.மாநகரசபையின் பொறியியற் பிரிவினால் முற்றாகப்புனரமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி வீதியினை இன்று 21.06.2018 வியாழக்கிழமை மாலை 03 மணியளவில் 02ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந்தினது அழைப்பின் பேரில் யாழ்.மாநகரசபையின் பிரதிமேயர் து.ஈசன் மற்றும் வட்டார உறுப்பினரான ப.தர்சானந் ஆகியோர் நேரில் பார்வையிட்டதுடன், வீதியமைப்பு பற்றி பிரதேச மக்களுடன் கலந்துரையாடினர்.

மேற்படி கலந்துரையாடலில் வீதி புனரமைக்கப்பட்டதுக்கு வட்டார உறுப்பினருக்கும், மாநகரசபைக்கும் மக்கள் நன்றிகளைத்தெரிவித்துக்கொண்டதுடன், யாழ்.மாநகரசபையின் பிரதிமேயர் து.ஈசன், யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந், பிரதேச மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − one =

*