;
Athirady Tamil News

வவுனியா மதுபோதையில் இளைஞர் குழு அட்டகாசம்: ஊழியர்கள் மீதும் தாக்குதல்..!!

0

வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் மதுபோதையில் இளைஞர் குழு அட்டகாம்: ஊழியர்கள் மீதும் தாக்குதல்

வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவிற்கு மது போதையில் பொல்லுகளுடன் சென்ற இளைஞர் குழு அட்டகாசம் புரிந்துள்ளதுடன், கடமையில் இருந்த ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இருந்து குடியிருப்பு சிறுவர் பூங்காவிற்கு மது போதையில் பொல்லுகளுடன் சென்ற இளைஞர் குழு ஓன்று பிறந்தநாள் கொண்டாடப் போவதாக தெரிவித்து உள்ளே நுழைந்து சிறுவர் பூங்காவில் வைத்து மது அருந்த முற்பட்டுள்ளனர்.

சிறுவர் பூங்காவில் மது அருந்த முடியாது எனக்கூறி அவர்களை வெளியேறுமாறு அங்கு கடமையில் இருந்த ஊழியர் தெரிவித்து அவர்களை வெளியேற்ற முற்பட்ட போது மது போதையில் இருந்த குறித்த இளைஞர்கள் அங்கு கடமையில் இருந்த ஊழியர் மீதும் அங்கு நின்ற இருவர் மீதும் த
தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

பூந்தோட்டத்தைச் சேர்ந்த கிரி
, அரன், அமெரிக்கன் குடிதண்ணீர் போத்தல் வவுனியா விற்பனை பிரதிநிதி உமேஸ் உள்ளிட்ட மேலும் சில
இளைஞர் குழுவே மது போதையில் இவ்வாறு அட்டகாசம் புரிந்து உள்ளதாக தெரியவருகிறது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − eighteen =

*