;
Athirady Tamil News

வெளிநாட்டு பணத்தை இலங்கையில் இருந்து கடத்த முயன்ற இந்தியர் கைது..!!

0

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஒரு தொகை வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற ஒருவரை நேற்று (21) சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சீனாவுக்கு பயணிப்பதற்காக விமான நிலையத்திற்கு சென்ற 54 வயதான இந்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 60 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை குறித்த நபரிடம் இருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 14 =

*