;
Athirady Tamil News

கிளைமோர் மற்றும் புலிக்கொடியுடன் ஒட்டிசுட்டானில் ஒருவர் கைது ..!! (படங்கள்)

0

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் என்பவற்றுடன் , முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் கைது.

அதில் பயணித்த இருவர் தப்பி ஓட்டம். கைதானவர் கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்தவர் எனவும் தப்பி ஓடிய ஒருவர் சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அறிய முடிகிறது

குறித்த சம்பவம் இன் று காலை ஆறுமணியளவில் வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்த போதே இச் கிளைமோர் மீட்டப்பட்டுள்ளது

இருப்பினும் மேலதிக தகவல்கள் எதனையும் ஒட்டிசுட்டான் பொலிசாரிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை நிலையைப் பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு வினவிய பொழுது விசாரணைகள் நடப்பதனால் எதனையும் கூறமுடியாது எனவும் தகவல்களை பொலிஸ் ஊடகப்பிரிவிடம் எடுக்குமாறும் தெரிவித்தார்

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*