;
Athirady Tamil News

யாழ்.மல்லாகம் சம்பவத்தின் எதிரொலி: ஆறுபேர் பொலிஸில் சரண்..!!

0

யாழ்.மல்லாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் தொடர்புடைய ஆறுபேர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.மல்லாகம் சகாயா மாதா தேவாலய வருடாந்தத் திருவிழாவில் குழப்பம் ஏற்படுத்தியவர்களை அப்பகுதி இளைஞர்கள் தடுத்த போது இருதரப்புக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உத்தியோகத்தரொருவர் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுடன் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 40 பேரைக் கைது செய்வதற்கு இலக்கு வைத்துள்ளோம் எனத் தெல்லிப்பழைப் பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்ற நாளிலிருந்து இதுவரை ஆறுபேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + seventeen =

*