;
Athirady Tamil News

நீ என்கிட்ட வராத போ: ஷாரிக்கை விரட்டிவிட்டு கதறி அழுத மும்தாஜ்..!! (வீடியோ)

0

பிக் பாஸ் வீடு நேற்று ஒரே அழுகாட்சியாக இருந்தது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க நினைத்து ஏதேதோ செய்கிறார்கள். ஆனால் ப்ரொமோ வீடியோக்களில் இருக்கும் சுவாரஸ்யம் நிகழ்ச்சியில் இல்லை.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஒரே அழுகையாக இருந்தது.

டேனி
டேனி தன்னை ரொம்ப கிண்டல் செய்வதால் மனமுடைந்த ஆர்.ஜே. வைஷ்ணவி ஒரு ஓரமாக அமர்ந்து அழத் துவங்கிவிட்டார். ஒரு முறை இரண்டு முறை என்றால் பரவாயில்லை ஆனால் எப்பொழுது பார்த்தாலும் கிண்டல் செய்வது கஷ்டமாக இருக்கிறது தெரியுமா என்று வைஷ்ணவி அழுது கொண்டே டேனியிடம் கூறினார்.

அழுகை
வைஷ்ணவி அழுவார் என்று பார்வையாளர்கள் யாரும் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அங்கே தான் டுவிஸ்ட் வைத்தார் பிக் பாஸ். வைஷ்ணவியாவது அழுவதாவது. டேனியை ஏமாற்ற அவர் செய்த டிராமா அது. அவரின் போலிக் கண்ணீரை உண்மை என்று நினைத்து ஏமாந்துவிட்டார் நடிகரான டேனி. வைஷ்ணவியிடம் ஜூலியின் சாயல் தெரிகிறதே. கடந்த சீசனில் ஜூலி அழுது சீன் போட்டு நடித்தது தான் நினைவுக்கு வருகிறது.

கண்ணீர்
சமையல் அறையில் ஜாலியாக வேலை செய்து கொண்டிருந்த மும்தாஜுக்கு ஷாரிக் ஹஸனை பார்த்தால் தனது அண்ணன் மகன் அர்மான் நினைவு வர உடனே கதறி அழத் துவங்கிவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*