;
Athirady Tamil News

சிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது..!!

0

சிறுத்தையை கொலை செய்வது போன்று புகைப்படங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று பகல் குறித்த உத்தரவினை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் பொலிசாரிற்கு பிறப்பித்துள்ளது.

நேற்றய தினம் அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களிற்குள் நுளைந்த சிறுத்தை, பிரதேசவாசிகளை தாக்க முற்பட்டபோது அங்கிருந்த இளைஞர்களால் தற்காப்புக்காக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த சிறுத்தை உயிரிழந்தமை தொடரிப்ல ஊடகங்களில் பரவலாக செய்தி வெளியானது.

இதேவேளை குறித்த சிறுத்தையின் மரணத்தின் பின்னர் சிறுத்தையை கொலை செய்வதுபோல் சமூக வலைத்தளங்கள் மூலம் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வைரலாக பரவியது. இந்நிலையில் குறித்த புகைப்படங்களை ஆதாரமாகக்கொண்டு நேற்றயதினம் நீதிமன்றில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இன்று பகல் குறித் வழக்கு மீள எடுத்து கொள்ளப்பட்டது. தொடர்ந்து குறித்த வழக்கில் இறுவெட்டு (சிடி) மூலம் சாட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகக்கொண்டு அனைவரையும் கைது செய்யுமாறும் இன்று மன்று கிளிநொச்சி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

கிளிநொச்சியில் பத்து பேரை கோரமாக தாக்கிய சிறுத்தை புலி..!!

சிறுத்தையை கொலை செய்தமை தொடர்பாக விசாரணை..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*