;
Athirady Tamil News

வவுனியாவில் மொட்டையடித்த விவகாரம்! சிரேஸ்ட மாணவர்கள் வளாகத்துக்குள் நுழைய தடை..!!

0

வவுனியாவில் பல்கலைக்கழக கனிஸ்ட மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரோலியாக யாழ் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட பிரயோக விஞ்ஞானபீட மாணவர்கள் வவுனியா வளாகத்திற்குள் நுழைய இன்று (22) தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக கனிஸ்ட மாணவர்கள் 25 பேர் ‘பகிடி வதை’ காரணமாக சிரேஸ்ட மாணவர்களின் உத்தரவுக்கு அமைவாக நேற்றைதினம் (21) மொட்டையடித்துக் கொண்ட விவகாரத்தின் எதிரோலியாகவே பல்கலைக்கழத்தின் வளாகத்திற்குள் நுழைய சிரேஸ்ட மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வளாகத்தில் இன்று முதல் மறு அறிவித்தல் வரும்வரை இரண்டாம் வருட பிரயோக விஞ்ஞானபீட மாணவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து பல்கலைக்கழகத்தின் தலைமையால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

வவுனியாவில் மிரட்டலுக்கு பயந்து மொட்டையடித்துக்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள்..!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 7 =

*