;
Athirady Tamil News

ஒன்றரை மாத குழந்தைக்கு நடந்த கொடூரம்..!!

0

கவந்தலாவ கொட்டியாகலை மேற்பிரிவு தோட்டத்தில் ஒன்றரை மாத குழந்தை ஒன்று அயலவர்களால் தாக்கபட்ட நிலையில் பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலையில் அனுமதிமகடகபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

இந்த தாக்குதல் சம்பவம் இன்று காலை 10.30மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

குறித்த தோட்டபகுதியில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற குடியிருப்புக்கு அருகாமயில் பிரச்சினை ஒன்று வாய்தர்க்கமாக மாறி பின்பு அது மோதலாக மாறியதால் குறித்த குழந்தையின் தாயயை தாக்க முற்பட்ட போது தற்செயலாக அந்த அடி ஒன்றரை மாதகுழந்தையின் கால்பகுதியில் விழுந்தது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செயய்பட்டுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்டவிசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த குழந்தையும் தாயும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் அனுமதிக்பட்டுள்ள குழந்தை தொடர்பில் வைத்திய அதிகாரி எ.எஸ்.கே.ஜெயசூரியவிடம் வினவிய போது குழந்தைக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லையெனவும் குழந்தை குறித்து பயப்படவேண்டிய அவசியம் இல்லையெனவும் தெரிவித்தார்.

கைது செய்யபட்ட மூவரையும் நாளை ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 5 =

*