;
Athirady Tamil News

பிரான்சில் அடுத்த மாதம் முதல் அறிமுகமாகும் புதிய சாலை விதிகள்..!!

0

அடுத்த மாதம் முதல் பிரான்சில் புதிய சாலை விதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

மிக நீண்ட விவாதங்களுக்குப்பின், நடுவில் மீடியன்கள் இல்லாத கிளைச்சாலைகளில் வாகனங்கள் செல்லும் வேகத்தை மணிக்கு 90 கிலோமீற்றர்களிலிருந்து 80 கிலோமீற்றர்களாக குறைக்கும் தீர்ப்பாணை ஒன்றை வழங்கியுள்ளது பிரான்ஸ் அரசு.

இதனால் ஆண்டொன்றிற்கு 300 முதல் 400 உயிர்களின் இழப்பு தவிர்க்கப்படும் என அரசு நம்புகிறது.

ஐரோப்பிய நாடுகளான மால்டா, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் கிளைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேகம் மணிக்கு 80 கிலோமீற்றர்கள்தான்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த நாடுகளில்தான் சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + four =

*