;
Athirady Tamil News

லால்பகதூர் சாஸ்திரி மரணம் குறித்த ஆவணங்களை வெளியிட வேண்டும்- மகன் கோரிக்கை..!!

0

மறைந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பற்றி எழுதப்பட்ட ‘லால்பகதூர் சாஸ்திரி: லெசன்ஸ் இன் லீடர்சிப்’ என்னும் ஆங்கிலப்புத்தகம், பஞ்சாபி மொழியில் நேற்று வெளியிடப்பட்டது. சண்டிகாரில் நடந்த இதுதொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய லால்பகதூர் சாஸ்திரியின் மகனும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அனில் சாஸ்திரி கூறியதாவது:-

எனது தந்தையின் மர்ம மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று அவருடைய மகன் என்கிற முறையில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதுபற்றி ஆய்வு செய்ய 1977-ம் ஆண்டு ராஜ்நாரயண் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையையும் மத்திய அரசு வெளியிடும்படி வேண்டுகிறேன். பா.ஜனதா எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்த கோரிக்கையை வைத்தது. ஆனாலும் அவர்கள் பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதைச் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நேருவின் மறைவுக்கு பிறகு பிரதமராக பதவி வகித்தவர் லால்பகதூர் சாஸ்திரி, 1966-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி சோவியத் ரஷியாவில், பாகிஸ்தானுடன் தாஷ்கண்ட் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். தாஷ்கண்ட் நகரில் தங்கியிருந்தபோது மறுநாள் திடீரென மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பில் இறந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவருடைய குடும்பத்தினர் இதில் அமெரிக்காவின் சதிவேலை இருக்கலாம் என்று குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 4 =

*