;
Athirady Tamil News

யாழில் சட்ட விரோத கடைகளை அகற்றுவதற்கு முன் அறிவித்தல்..!!

0

யாழ்ப்பாண நகர அபிவிருத்திக்காக மத்திய பேரூந்து நிலையத்தை சுற்றி அமைந்துள்ள சட்ட விரோத கடைகள் யாவும் இடித்து அகற்றுவதற்கான முன் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.

இவ்வாறு இடிக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்கும்போது இக் கடைகளை சட்டவிரோதமாக அமைக்க யார் அவர்களிற்கு அனுமதியளித்தனர் என்பது தெரிய வரும் . எனவும் நேற்றைய தினம் யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற நிலையியற் குழக்களின் அறிக்கைகள் தொடர்பான விவாத்ததின் போதே இதனை தெரிவித்தார்.

யாழ்.மத்திய பேரூந்து நிலையம் அமைந்துள்ளபகுதியை இலங்கை போக்குவரத்து சபைக்கு குத்தகைக்கு வழங்கியுள்ள நிலையில் அவர்கள் அதனை சுற்றி கடைகளை அமைக்க அனுமதி வழங்கியுள்ளனர். இதற்கான வருமானமானம் மாநகர சபைக்கு கிடைப்பதில்லை. அக் கடை உரிமையாளர்கள் தாம் விரும்பிய பணத்தை இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கிவிட்டு தமது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அவ் விற்பனை நிலையங்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு நாம் அறிவித்தல் அனுப்பி விட்டோம். இவ் அறிவித்தல் அனுப்பபட்டு 14 நாட்கள் கழித்து அவை அங்கிருந்து மாநகரசபையால் அகற்ப்படும். இதற்கு அனைத்து மாநகர சபை உறுப்பினர்களும் வருகை தர வேண்டும் . மாறாக அடுத்த தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் என ஓடி ஒழிய வேண்டாம். என்றார்.

இதன்போது இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபைக்கு சட்டவிரோத கடைகளை மாநகர சபையின் அனுமதியின்றி அமைக்க அனுமதி கொடுத்தது யார் என உறுப்பினர் ஒருவர் வினாவினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ,

குறித்த விற்பனை நிலையங்கள் அங்கிருந்து அகற்றப்படும் அந் நாளில் அது தொடர்பான முழுமையான தகவல்களும் தெரிய வரும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − one =

*