;
Athirady Tamil News

வவுனியா வைரவபுளியங்குளம், ஆதிவிநாயகர் ஆலயத்தில் திருடர்கள் கைவரிசை..!! (படங்கள்)

0

வவுனியா வைரளிங்குளத்தில் அமைந்துள்ள ஆதிவிநாயகர் ஆலயத்தின் திருப்பணி உண்டியல் இன்று அதிகாலை களவாடிச்செல்லப்பட்டுள்ளது.

இதுபற்றி தெரியவருவதாவது,
இன்று அதிகாலை வழமை போன்று ஆலயத்தினை கோயிலின் கணக்காளர் திறந்து அறையினுள் பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு உண்டியல்களினை எடுத்து ஆலயத்தினுள் வைத்துவிட்டு, ஆலயத்தினை சுத்தம் செய்வதற்காக கோயிலின் பின்பக்கம் சென்று துடைப்பத்தை எடுக்க சென்ற போதே இத்திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு திருடர்களினால் தூக்கிச்செல்லப்பட்ட குறித்த ஆலயத்தின் திருப்பணி உண்டியலினை வவுனியா பண்டாரிக்குளம் குளத்தருகில் உடைத்து பணத்தினை எடுத்துக்கொண்டு உண்டியலினை குளத்தினுள் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இத்திருட்டு சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதுடன், இத்திருட்டு தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு திருடப்பட்ட உண்டியலில் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வரை பணம் இருந்ததாக ஆலய கணக்காளர் தெரிவித்திருந்தார். மேலும் இவ்வாலயத்தினை புனர்நிர்மாணம் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + two =

*