;
Athirady Tamil News

புதையலை கண்டறிய பயன்படும் ஸ்கேனர் இயந்திரத்துடன் ஒருவர் கைது..!!

0

யானை தந்தத்தின் பாகங்கள் மற்றும் புதையல் என்பவற்றை கண்டறிய பயன்படுத்தப்படும் அதி நவீன ஸ்கேனர் இயந்திரத்தை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொபேய்கன பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனை செய்யும் போது யானை தந்தத்தின் பாகமும் ஸ்கேனர் இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அவர் நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*