;
Athirady Tamil News

ஜார்கண்டில் துப்பாக்கிமுனையில் 5 இளம்பெண்கள் கற்பழிப்பு…!!

0

ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள கோச்சாங் என்ற கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிலர், பெண்கள் மற்றும் குழந்தை கடத்தல் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 19-ந் தேதி இதுதொடர்பாக சாலையில் விழிப்புணர்வு நாடகம் ஒன்றை அவர்கள் நடத்தினர். இந்த நாடகத்தில் 5 இளம் பெண்களும் பங்கேற்று நடித்தனர். அவர்களில் ஒரு இளம் பெண் சமீபத்தில் திருமணமானவர் என தெரிகிறது.

நாடகம் நடந்துகொண்டிருந்த போது, அங்கு துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் 5 இளம் பெண்களையும் கடத்திச் சென்றது. பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சென்ற அந்த கும்பல், துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 இளம் பெண்களையும் கற்பழித்தது.

மேலும், அதனை செல்போனில் வீடியோ எடுத்த மர்ம கும்பல், இதுபற்றி போலீசிடம் புகார் அளித்தால் வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் எனவும் மிரட்டல் விடுத்தது.

சுமார் 3 மணிநேரத்திற்கு பிறகு அந்த பெண்களை மர்ம கும்பல் விடுவித்தது. அதன் பின்னர் தங்களுடைய கிராமத்திற்கு திரும்பிய பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அவலம் குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் எடுத்துக்கூறினர்.

இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து அந்த மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 5 =

*