;
Athirady Tamil News

துனீஷியாவை நாக் அவுட் செய்யுமா… நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுமா பெல்ஜியம்..!!

0

21வது ஃபிபா உலகக் கோப்பை பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் நடந்து வருகின்றன. இதில் ஜி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் துனீஷியாவை சந்திக்கிறது பெல்ஜியம். இதில் வென்றால் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பெல்ஜியத்துக்கு கிடைக்கும். 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன.

போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன. இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும். அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் ஜி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பெல்ஜியம், துனீஷியா விளையாடுகின்றன. —- பிரிவு ஜி பெல்ஜியம் – துனீஷியா போட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி மாலை 5.30 மணி —- ஜி பிரிவில் இதுவரை… * பெல்ஜியம் 3-0 என பனாமாவை வென்றது. * இங்கிலாந்து 2-1 என துனீஷியாவை வென்றது. புள்ளிப் பட்டியலில் பெல்ஜியம், இங்கிலாந்து தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. துனீஷியா, பனாமா கணக்கை துவக்கவில்லை.

ஜி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என அறிமுக அணியான பனாமாவை வென்றது. அதற்கடுத்து நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 2-1 என துனீஷியாவை வென்றது. 13வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் விளையாடியது. பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில், சின்ன அணியுடன் விளையாடுகிறோம் என்று மெத்தனமாக விளையாடாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பெல்ஜியம். 1978ல் மெக்சிகோவுக்கு எதிராக துனீஷியா தனது முதல் வெற்றியை சுவைத்தது.

அதன்பிறகு, இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. தற்போது ஐந்தாவது உலகக் கோப்பையில் துனீஷியா விளையாடுகிறது. முன்னாள் சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக துனீஷியா கடுமையாக போராடியது. இன்றைய ஆட்டத்தில் துனீஷியாவை வென்றால் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், பெல்ஜியம் கண்டிப்பாக விவேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*