;
Athirady Tamil News

கோப்பையை தக்க வைக்க கடைசி வாய்ப்பு… அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா… ஸ்வீடனை சந்திக்கிறது ஜெர்மனி..!!

0

21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் நடந்து வருகின்றன. இதில் எப் பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் தென்கொரியாவை சந்திக்கிறது மெக்சிகோ. அதற்கடுத்த ஆட்டத்தில் ஸ்வீடனுடன் நடப்பு சாம்பியன் ஜெர்மனி விளையாடுகிறது, 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன.

போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன. இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும். அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் எப் பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் தென்கொரியா, மெக்சிகோ விளையாடுகின்றன. அதற்கடுத்த ஆட்டத்தில் ஸ்வீடனை சந்திக்கிறது நடப்பு சாம்பியன் ஜெர்மனி —- பிரிவு எப் ஜெர்மனி – ஸ்வீடன் போட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி இரவு 11.30 மணி —- எப் பிரிவில் இதுவரை… * மெக்சிகோ 1 – 0 என ஜெர்மனியை வென்றது. * ஸ்வீடன் 1 – 0 என தென்கொரியாவை வென்றது. புள்ளிப் பட்டியலில் ஸ்வீடன் மற்றும் மெக்சிகோ தலா 3 புள்ளிகளுடன் உள்ளன.

ஜெர்மனி, தென்கொரியா புள்ளி ஏதும் பெறவில்லை. —– இந்த உலக் கோப்பையில் எப் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது மெக்சிகோ. இரண்டாவது ஆட்டத்தில் ஸ்வீடன் 1-0 என தென்கொரியாவை வென்றது. எப் பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் முதல் ஆட்டத்தில் மெக்சிகோ, தென்கொரியா சந்திக்கின்றன. இதில் வென்றால் மெக்சிகோ அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிவிடும். அதே நேரத்தில் தென்கொரியா வெளியேறும். இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி, ஸ்வீடன் விளையாடுகின்றன.

இதுவரை பிரேசில் மட்டுமே அதிகபட்சமாக 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த முறை தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வெல்வதுடன் பிரேசில் சாதனையை சமன் செய்யும் இலக்குடன் ஜெர்மனி களமிறங்கியுள்ளது. ஆனால் முதல் ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனி மிகவும் சிறப்பாகவே விளையாடியது. கிட்டத்தட்ட 67 சதவீத நேரம் பந்து அந்த அணியிடமே இருந்தது. ஆனால், கோலடிக்கும் வாய்ப்பை ஜெர்மனி தவற விட்டது. அதே நேரத்தில் 2006ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையில் விளையாட ஸ்வீடன் தகுதி பெற்றுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் வென்றால் ஸ்வீடன் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறவிடும். அதனால் அந்த அணி மிகுந்த ஆக்ரோஷத்துடன் விளையாடும். இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் வெளியேறும் நிலை உள்ளதால், ஜெர்மனி புதுத் தெம்புடன் விளையாடும் என்று எதிர்பார்க்கலாம். கோப்பையை தக்க வைக்க அடுத்தச் சுற்றுக்கு முன்னேற வேண்டும். அதற்கு இதுவே கடைசி வாய்ப்பு என்பதால் ஜெர்மனி பல மடங்கு வேகத்துடன் விளையாட வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 15 =

*