;
Athirady Tamil News

பாகிஸ்தான் தேர்தல் – நவாஸ் மகள் மரியம் நவாஸ் 2 தொகுதிகளில் போட்டி.!!!

0

பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், நவாஸ் ஷெரீப் குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் 120-வது தொகுதியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அதேசமயம், போட்டியிட விரும்புவோர் குறித்த விவரங்களை கட்சியின் தலைவர் ஷேபாஸ் ஷெரீப் கேட்டிருந்தார்.

அதன்பின்னர் லாகூரில் உள்ள 125 மற்றும் 127-வது தொகுதிகள் மற்றும் பஞ்சாபில் உள்ள 173-வது தொகுதியில் போட்டியிடுவதற்காக மரியம் நவாஸ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், தற்போது லாகூர் மற்றும் பஞ்சாபில் உள்ள 127 மற்றும் 173-வது தொகுதிகளில் மரியம் நவாஸ் போட்டியிட உள்ளார். கட்சியின் பாராளுமன்றக் குழு இதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக ஜியோ டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 7 =

*