;
Athirady Tamil News

யாழ்.மாநகரசபையால் வீதி புனரமைப்பு..!! (படங்கள்)

0

யாழ்.மாநகரசபையால் வீதி புனரமைப்பு – பிரதிமேயர், உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

யாழ்.மாநகரசபையின் 05ஆம் வட்டாரமான சங்கிலியன் தோப்பு வட்டாரத்தில் உள்ளடங்கியுள்ள கச்சேரிநல்லூர் வீதியில் அமைந்துள்ள உப ஒழுங்கையான, கடுக்காயடி ஒழுங்கையானது மக்கள் போக்குவரத்துச்செய்ய முடியாதவாறு மோசமாகச்சிதைவடைந்து காணப்பட்டது.

கடந்த உள்ளூராட்சித்தேர்தலில் மேற்படி 05ஆம் வட்டாரத்தில் வெற்றிபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினரான திருமதி. மதிவதனி விவேகானந்தராசாவின் முயற்சியால் மேற்படி வீதியானது யாழ்.மாநகரசபையின் பொறியியற் பிரிவினால் துரித கதியில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

மேற்படி வீதிப்புனரமைப்பினை இன்று 23.06.2018 சனிக்கிழமை மாலை 04 மணியளவில் 05ஆம் வட்டார யாழ்.மாநகரசபை உறுப்பினரான திருமதி. மதிவதனி விவேகானந்தராசாவின் அழைப்பின் பேரில் யாழ்.மாநகரசபையின் பிரதிமேயர் து.ஈசன் மற்றும் யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டார உறுப்பினரும், சுகாதாரக்குழு உறுப்பினருமான ப.தர்சானந் ஆகியோர் நேரில் பார்வையிட்டதுடன், வீதியமைப்பு பற்றி பிரதேச மக்களுடன் கலந்துரையாடினர்.

மேற்படி கலந்துரையாடலில் வீதி புனரமைக்கப்பட்டதுக்கு வட்டார உறுப்பினருக்கும், மாநகரசபைக்கும் மக்கள் நன்றிகளைத்தெரிவித்துக்கொண்டதுடன், யாழ்.மாநகரசபையின் பிரதிமேயர் து.ஈசன், 05ஆம் வட்டார யாழ்.மாநகரசபை உறுப்பினரான திருமதி. மதிவதனி விவேகானந்தராசா, யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டார உறுப்பினரும், சுகாதாரக்குழு உறுப்பினருமான ப.தர்சானந் , மற்றும் பிரதேச மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 4 =

*