;
Athirady Tamil News

காசல்ரி நீர்தேக்கத்தில் ஆணின் சடலம்..!!

0

காசல்ரீ நீர்தேக்க கரையோரத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி தோட்டத்திற்கு அருகிலே இன்று (23) மா லை 03 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காசல்ரீ நீர்தேக்கத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டவர்கள் சடலத்தை கண்டு நோர்வூட் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் ஹட்டன் மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின் பிரேத பரிசோனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 3 =

*