;
Athirady Tamil News

நடப்பு சாம்பியன் ஜெர்மனியை வென்றது ஃப்ளூக் அல்ல…. தென்கொரியாவிடம் நிரூபிக்குமா மெக்சிகோ..!!

0

21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்றில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் நடந்து வருகின்றன. இதில் எப் பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் தென்கொரியாவை சந்திக்கிறது மெக்சிகோ. அதற்கடுத்த ஆட்டத்தில் ஸ்வீடனுடன் ஜெர்மனி விளையாடுகிறது, 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன.

போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன. இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும். அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் எப் பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் தென்கொரியா, மெக்சிகோ சந்திக்கின்றன. —- பிரிவு எப் மெக்சிகோ – தென்கொரியா போட்டி நடக்கும் நேரம் – இந்திய நேரப்படி இரவு 8.30 மணி —- எப் பிரிவில் இதுவரை… * மெக்சிகோ 1 – 0 என ஜெர்மனியை வென்றது. * ஸ்வீடன் 1-0 என தென்கொரியாவை வென்றது. புள்ளிப் பட்டியலில் ஸ்வீடன் மற்றும் மெக்சிகோ தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. ஜெர்மனி, தென்கொரியா புள்ளி ஏதும் பெறவில்லை. —– இந்த உலக் கோப்பையில் எப் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது மெக்சிகோ.

இரண்டாவது ஆட்டத்தில் ஸ்வீடன் 1-0 என தென்கொரியாவை வென்றது. எப் பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் முதல் ஆட்டத்தில் மெக்சிகோ, தென்கொரியா சந்திக்கின்றன. மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி, ஸ்வீடன் விளையாடுகின்றன. உலகக் கோப்பையில் 14 அல்லது அதற்கு மேற்பட்ட முறை விளையாடியுள்ள 8 அணிகளில், கோப்பையை வெல்லாத ஒரே அணி மெக்சிகோ. 1986 முதல் தொடர்ந்து உலகக் கோப்பையில் தென் கொரியா விளையாடுகிறது.

மேலும் 10வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது. இந்த சாதனையை இதுவரை எந்த ஆசிய அணியும் செய்ததில்லை. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வென்ற மெக்சிகோவும், முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த தென்கொரியாவும் இன்று சந்திக்கின்றன. இந்த ஆட்டத்தில் வென்றால் மெக்சிகோ அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிவிடும். அதனால் முந்தைய ஆட்டத்தைப் போலவே இதிலும் தனது முழு திறமையை அது காட்டும். இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால், வெளியேறும் நிலை ஏற்படும் என்பதால், அதை தடுப்பதற்கான முயற்சியில் தென்கொரியா ஈடுபடும். அதனால் இன்றைய ஆட்டம் பரபரப்பாகவே இருக்கும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 15 =

*