;
Athirady Tamil News

சுகாதாரத் துறையில் மாற்றங்கள் தேவையில்லை என கருதும் சுவிட்சர்லாந்து மக்கள்: ஆய்வு..!!

0

சுவிட்சர்லாந்தின் மருந்தக கூட்டமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து மக்கள் சுகாதாரத் துறையில் மாற்றங்கள் எதுவும் தேவையில்லை என கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Interpharma என்னும் சுவிட்சர்லாந்தின் மருந்தக கூட்டமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் சுவிட்சர்லாந்து மக்கள் சுகாதாரத் துறை திருப்திகரமாக இருப்பதாகவும் அதில் மாற்றங்கள் எதுவும் தேவையில்லை என கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1200 பேரிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது அளவு, தரம் ஆகியவற்றில் அதிக கவனமும் விலையில் குறைந்த கவனம் செலுத்த மக்கள் விரும்புவது தெரிய வந்துள்ளது

மருத்துவக் காப்பீட்டிற்கான பிரீமியத்தை ஊதியத்துடன் இணைப்பதற்கு மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே சம்மதம் தெரிவித்தனர். ஆறில் ஒருவர் அதை ஒரு பிரச்சினையாக கருதுகிறார்கள்.

அதுபோல சுவிஸ் சுகாதாரத்துறையில் பெரிதும் பேசப்பட்டுவரும் விடயமான global budget என்னும் திட்டம் குறித்து கேட்கும்போது, 91 சதவிகிதம் பேர், அத்தகைய ஒரு திட்டத்தால் நீண்ட காலம் காத்திருக்க நேரிடும் என்றும், மருத்துவர் அல்லது மருத்துவமனையை தேர்ந்தெடுப்பதில் பிரச்சினை ஏற்படும் என்றும் எண்ணுகின்றார்கள்.

54 சதவிகிதம் பேர், global budget திட்டத்தால் மருத்துவக் காப்பீட்டிற்கான பிரீமியம் குறையும் என நம்பவில்லை என்றும் 74 சதவிகிதம் பேர், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் கிடைக்காது என அஞ்சுவதாகவும் தெரியவந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*